தகவல் சுரங்கம் : கிழக்கு ஆசிய கூட்டமைப்பு
தகவல் சுரங்கம்கிழக்கு ஆசிய கூட்டமைப்புசமீபத்தில் 19வது கிழக்கு ஆசிய மாநாடு லாவோஸ் நாட்டில் நடைபெற்றது. இக்கூட்டமைப்பில் கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியாவை சேர்ந்த 18 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. துவக்கத்தில் இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், வியட்நாம் உட்பட16 நாடுகள் இருந்தன. பின் 2011ல் அமெரிக்கா, ரஷ்யா சேர்க்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 2005ல் மலேசியாவில் நடந்தது. இந்தியாவில் இதுவரை நடைபெறவில்லை.