உள்ளூர் செய்திகள்

வினோத தண்டனை!

விழுப்புரம் மாவட்டம், நடராஜ ஐயர் ஆரம்ப பாடசாலையில், 1949ல், 5ம் வகுப்பு படித்தேன். அப்போது - எங்கள் சமூக பாட ஆசிரியர் துரைராஜ், அன்றாடம் நடத்தும் பாடங்களில், மறுநாள், கேள்வி கேட்பார். பதில் கூறாத மாணவர்களை, பதில் சொல்லும் மாணவர்களை விட்டு, கன்னங்களில் அறைய சொல்வார். தண்டனைக்கு பயந்து, மாணவர்கள் நன்கு படிக்க ஆரம்பித்தனர். கவனம் செலுத்தி படிப்பவர்களை மிகவும் ஊக்கப்படுத்துவார். அவரிடம் படித்த நான், உயர் பதவியடைந்து, ஓய்வு பெற்றேன். என் வயது, 80; என்னை படிக்க வைக்க அவர் செய்த முயற்சியை நினைவில் கொள்கிறேன். அவர் தந்த ஊக்கத்தால், உடல் நலத்தோடு, வாழ்கிறேன்!- தெ.கண்ணப்பன், நெய்வேலி.தொடர்புக்கு: 94871 54096


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !