உள்ளூர் செய்திகள்

அலுமினியம்!

பழங்காலத்தில், அலுமினியம் அபூர்வ உலோகமாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அப்போது, 'அலுமினியம் எல்லாருக்கும் கிடைக்காதா' என்ற கேள்வியை சிறு வயதிலே, எழுப்பி விடை தேடினார், அமெரிக்காவை சேர்ந்த, சார்லஸ் மார்ட்டின் ஹால்.இந்த ஆர்வம், பல நுால்களை படிக்க துாண்டியது; தேடலுக்கு விடையும் கிடைத்தது. சாதாரண களி மண்ணிலே, அலுமினிய தாது அதிகம் உள்ளதை அறிந்தார். அதை, சுலபமாக பிரித்து எடுக்கும் வழிமுறையை தேடினார். புதிய சிந்தனை பிறந்தது; துாய அலுமினியத்தை பிரிக்கும் எளிய வழிமுறையை கண்டறிந்தார். அவரது தளராத முயற்சியால், அதிக செலவில்லாமல், அலுமினிய உலோகம் பிரித்து எடுக்கப்படுகிறது.அலுமினிய பாத்திரங்கள், உலகெங்கும் இன்று தாராளமாக புழக்கத்தில் உள்ளன. ஒரு காலத்தில், வெள்ளியை விட, மதிப்புமிக்க உலோகமாக கருதப்பட்டது. அரிய கண்டுப்பிடிப்புகள், அறிஞர்களின் ஆர்வத்தால் நிகழ்ந்துள்ளன; அறிஞர் ஹாலின் வெற்றி, இடையறாத முயற்சியால் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !