உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு !

அனைவருக்கும் எனது அன்பு.கிலோ கணக்கில் மிளகா சாப்பிடுவோம் ! அக்காவுக்கு வயது 7; தங்கைக்கு வயது 5. இருவருக்கும் சாக்லெட், ஸ்வீட் எல்லாம் பிடிக்காது. எப்போதும் சாப்பிடுவது மிளகாய்தான். ஒரு நாளைக்கு எவ்வளவு மிளகாய் சாப்பிடுகின்றனர் தெரியுமா? மூன்று கிலோ. சேர்ந்து அல்ல, தனித்தனியாக.மேற்கு வங்கத்தின் மீனவர் குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இவர்கள். மேற்கு வங்க மாநிலம் மொந்தமோனி என்ற கடலோர பகுதியில் வசித்து வருபவர் ஜதின் சாது. இவருக்கு சாந்தி (7), கோஷ்னா(5) ஆகிய இரு பெண் குழந்தைகள். இவர்கள் இருவருக்கும் அபூர்வமான உணவுப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தையாக - மிக சிறிய வயதிலேயே சாக்லெட், மிட்டாய், ஸ்வீட் ஆகியவற்றை இவர்கள் பார்த்ததே இல்லை. இவர்களுக்கு சாக்லெட், மிட்டாய், ஸ்வீட் எல்லாமே மிளகாய்தான். எப்போது பார்த்தாலும் மிளகாயை மிட்டாய் கடிப்பது போல கடித்து சாப்பிட்டு கொண்டிருப்பர். இந்த பழக்கம் இப்போது அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.தினமும் இவர்கள் தலா 3 கிலோ மிளகாய் சாப்பிடுகின்றனர். ஜதின் மனைவியின் சகோதரர் அருண் மண்டல், மிளகாய் பயிர் விவசாயம் செய்வது வழக்கம். இந்த இரு குழந்தைகளும் அருணிடம் மிகவும் பாசமாக இருந்தனர்.  அதனால், மிளகாய் தோட்டத்துக்கு போகும் போதெல்லாம் இவர்களை அழைத்து சென்றார் அருண். விவசாய வேலையில் அவர் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒருநாள் சாந்தி மிளகாய்களை பறித்து சாப்பிட்டபடி இருந்தாள். இதைப் பார்த்த அருணுக்கு அதிர்ச்சி.  ஆனால், அவளை கண்காணித்தபடி இருந்தார். அவள் மிளகாய் சாப்பிட்டவுடன் காரம் தாங்காமல் துடிக்க போகிறாள் என்று நினைத்தார். ஆனால், சாந்திக்கு காரம் எடுக்கவே இல்லை. மீண்டும் மிளகாய்களை பறித்து சாப்பிட்டபடி இருந்தாள். மிளகாயை சாப்பிட கூடாது என்று அவர் தடுத்தும், சாந்தியின் பழக்கம் மாறவில்லை.போதாக்குறைக்கு சாந்தியை பார்த்து, ஜோஷ்னாவும் மிளகாய்களை பறித்து சாப்பிட ஆரம்பித்தாள். எவ்வளவோ தடுத்தும் இவர்கள் இருவரின் மிளகாய் சாப்பிடும் பழக்கம் மட்டும் நிற்கவேயில்லை. இப்படி தொடர்ந்த இந்த அபூர்வ பழக்கம், இப்போது இவர்களுக்கு ஸ்வீட், ஸ்நாக்ஸ் எல்லாமே மிளகாய்தான் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.ஒருநாளைக்கு மூன்று கிலோ மிளகாய் சாப்பிடுவதால், இவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்று டாக்டர்கள் பரிசோதித்தனர். ஆனால், அவர்களுக்கே வியப்பு. உடலில் குடல் உட்பட எந்த உறுப்புகளும் பாதிக்கப்படவில்லை. மிளகாய் பாதிப்பு உடலில் அறவே காணப்படவில்லை.குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு, டிபன் போல மிளகாயும் ஜீரணமாவதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மிளகாய் எப்படி ஜீரணம் ஆகிறது என்பது பற்றி அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.கலாம் காலம் ! எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?அன்பு கலாம் அவர்களின் பதில்: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாக கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.அம்மா ! ப்ளீஸ் செஞ்சு தாங்கம்மா ! இது 'நூடுல்ஸ் சூப்' செய்முறை நேரம்.தேவையானவை:பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிபிளவர் எல்லாம் சேர்த்து - 2 கப், வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு, சர்க்கரை - 1/2 டீஸ்பூன், கார்ன்ப்ளார் - 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப.செய்முறை:பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை போட்டு, அரைப்பதம் வரை கொதிக்க விடவும். அரை கப் தண்ணீரில் கார்ன்ப்ளாரை கரைத்து அதில் சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும். பிறகு சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும். இது பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சூப் என்றாலே ஆரோக்கியம்தான்.நீளப் பெயர் - டோன்ட் டாக் ! அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் காரெட் 19 வயதான இவர், வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக தன் பெயரை மாற்றி கொண்டு இருக்கிறார்.இவரது புதிய பெயர், 'கேப்டன் பண்டாஸ்டிக் பாஸ்டர் தேன் சூப்பர் மேன் ஸ்பைடர்மேன் பேட்மேன் வோல்வோரைன் ஹக் அண்டு தி பிளாஷ் கம்பைன்டு'இதுதான் அந்த நீளமான பெயர். இந்த பெயர்தான் உலகிலேயே மிக நீளமான பெயராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதை அதிகாரப்பூர்வமாக மாற்றி கொண்டு இருக்கிறார். ஆனால், அவர் இப்படி பெயர் வைத்து கொண்டது ஒரு பார்ட்டிக்கு பிடிக்கவில்லை.அது வேறுயாரும் இல்லை, அவரது பாட்டிதான். இவரின் பெயர் மாற்றம் பாட்டிக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர் பண்டாஸ்டிக் பாஸ்டர் உடன் பேசுவதை நிறுத்தி விட்டார். பேரன் புதுமையா சாதனை செய்யறானேன்னு பாட்டி நினைக்கலை போல.கஷ்டப்பட்டு சாதிக்காம, சோம்பேறித்தனமா பெயரை மாற்றிக்கிட்டு, பிலிம் காட்டறானேன்னு பாட்டி நினைச்சிருப்பாங்க போல. அவ்வளவு நீள பெயரை சொல்லி முடிக்க, இந்த வயதான காலத்தில் எவ்வளவு கஷ்டம்னு பாட்டி நினைச்சிருப்பாங்க போல.என்றென்றும் அன்புடன், அங்குராசு.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !