அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எவ்வளவு பழசு இது!பூமிக்குள் புதைந்துள்ள தொல் பொருள்களின் வயதை கண்டுபிடிக்க விஞ்ஞான முறைகளை பயன் படுத்துகின்றனர். அவற்றில் மிகப் பழமையான முறை, 'ஸ்டிராட்டி கிராபி' என்பது. பூமியை தோண்ட, தோண்ட பழசு என்பதுதான் ஆதாரமான விஷயம். நாகரிகங்கள் ஒன்றன் மேல் ஒன்று சூப்பர் இம்போஷிஷன் முறையில் படிகின்றன. எனவே, தோண்டத் தோண்ட பொருள் எவ்வளவு ஆழத்தில் கிடைத்தது என்பதை வைத்து, அதன் காலத்தை மதிப்பிடுவர்.இதற்கடுத்த முறை 'ஆர்ட்டிபாக்ட்ஸ்' என்பது. ஓர் இடத்தில் தோண்டும்போது காசு கிடைத்தால் அந்த காசை வைத்துக் கொண்டு காலத்தை கண்டுபிடிக்கலாம். அதுபோல், இரும்பு ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் இவற்றை வைத்துக்கொண்டு, மற்றொரு இடத்தில் அதே மாதிரி மண்பாண்டம் கிடைத்தால் அதன் காலத்தை மதிப்பிட முடியும். இவற்றை யெல்லாம் 'ரிலேட்டிவ் க்ரோனாலஜி' என்று வகைப்படுத்துவர்.இதில், 'ஆப்ஸிடியன் ஹைட்ரேசன்' என்பது முக்கியமான முறை. ஆப்ஸிடியன் என்று ஒரு வகை கண்ணாடிக்கல் உண்டு. அது பழங்காலத்தில் ஆயுதங்களுக்கு மிகவும் பயன்பட்டது. இந்த கல்லினுள் பொதிந் திருக்கும் ஈரத்தை மைக்ராஸ்கோப் மூலம் மதிப்பிடமுடியும். இதன் மூலம் காலத்தை கணக்கிடலாம்.இது போக, 'க்ரோனோமெட்ரிக் டேட்டிங்' என்று ஒன்று உள்ளது. பொட்டாசியம் ஆர்கான் முறை, ப்ளூரின் நைட்ரஜன் முறை போன்றவை யும் உள்ளன. எலும்புகளை ஆராய்வதற்கு இந்த முறைகள் பயன்படுகின்றன. புதைக்கப் பட்ட எலும்புகளும், பற்களும் மெல்ல தரையின் அடி ஈரத்திலிருந்து ப்ளூரின் என்ற வாயுவை உள் வாங்கிக் கொண்டு அவற்றி லிருக்கும் பாஸ்பேட் சக்தி ப்ளூரினுடன் சேர்ந்து ப்ளூரோபேட்டைட்'டாக மாறுகிறது.எத்தனை நாள் பூமிக்கடியில் புதைந்திருக் கிறதோ அதற்கேற்ப அந்த எலும்பில் உள்ள இந்த ப்ளூரின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. இதன் அளவை எக்ஸ்ரே கிரிஸ் டலோக்ராபி என்ற முறையில் அளவிட முடியும். இதிலிருந்து அந்த எலும்பு எத்தனை ஆயிரம் வருடங் கள் பூமிக்கு அடியில் புதைந்திருந்தது என்பதை சொல்லி விடலாம். இப்போது லேட்டஸ்டாக செய்யப் படுவது. 'ரேடியோ கார்பன் டேட்டிங்' என்பதுதான். 1949ல் வில்லியர்ட் லிபி என்பவர்தான் முதலில் இதை கண்டு பிடித்தார். இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொருளின் பழமையை கண்டுபிடிக்கும் முறையாக மாறியுள்ளது. இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.முட்டி தரும் காசுஜப்பானியர்கள் சுறுசுறுப்பு மிக்க உழைப்பாளிகள் என கேள்விப் பட்டிருக்கிறோம். அந்த வகையில் இளம் பெண்கள் மத்தியில் தற்போது ஒரு புதிய மோகம் ஆட்டிப்படைக்கிறது. அதாவது தங்களது முன்புற முழங்கால் பகுதியை விளம்பரப்பலகையாக பதிவு செய்து, குத்தகைக்கு விட்டு பணத்தை வாரிக் குவிக்கின்றனர்.இதற்காக செயல்படும் நிறுவனம் வழங்கும் குறிப்பிட்ட ஸ்டிக்கர்களை முழங்கால்களில் ஒட்டிக் கொண்டு பணி இடங்களிலும், வெளியேயும் உலா வர வேண்டும். இப்படி 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் சுற்றி வந்தால் அதற்கு ஏற்ப வெகுமதி கிடைக்கும்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.