உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!(கடி) காரம் பற்றிய செய்தி!கடிகாரங்கள் தயாரிப்பதில், முன்னோடியான, 'ஸ்விஸ்' நிறுவனம், ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிஸ்சர்லாந்தில் உள்ளது. இந்நிறுவனம் தரும் ருசிகரமான தகவல்கள்...* முற்காலத்தில், கடிகாரங்கள், வீட்டின் பெரும் பகுதியை அடைத்திருந்தன. அதனால், பெரிய மாளிகைகள், அரண்மனைகளில் மட்டும் பயன் படுத்தினர்; இப்போது, அத்தகைய கடிகாரங்கள், காட்சி பொருளாகி விட்டன* பிற்காலத்தில், அளவை சிறிதாக்கி, சுவற்றில் தொங்கும்படி வடிவமைத்தவுடன் பலரும் வாங்கினர்* ஆங்கிலேயர்கள், நம்மை ஆண்ட போது, எல்லா அரசு அதிகாரிகளுக்கும், அரசு செலவில், கடிகாரங்கள் வழங்கப்பட்டன; அரசு அலுவலகங்களிலும், கடிகாரங்கள் தொங்க விடப்பட்டன* இந்தியாவில், ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக, சமஸ்தான மன்னர்களும், ஜமீன்தார்களும் அதிக பொருட் செலவில், அலங்கார கடிகாரங்களை வாங்கினர்* கடிகார தயாரிப்பு நிறுவனங்களின் முகவர்கள், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் கடிகாரங்கள் எப்படி இயங்குகிறது, அதன் சிறப்புகள் என்ன என்று எடுத்துக் கூறி, வாங்க துாண்டினர்* ஐதராபாத் நிஜாமின், தன் அரண்மனைக்கு, மிக அழகான சுவர் கடிகாரம் ஒன்றை, 'ஸ்விஸ்' நிறுவனம் உருவாக்கி கொடுத்தது. இன்றும், அந்த கடிகாரம், 'ஜலார் ஜங்' அருங்காட்சியகத்தில், அதிசய காட்சிப் பொருளாக உள்ளது* பிறகு, பாக்கெட் கடிகாரம் தயாரிக்கப்பட்டது. ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள் கோட் பாக்கெட்டில் அணிந்தனர்* அரண்மனைகளில் மட்டும் வாசம் செய்த கடிகாரங்களை, சாதரண மக்களும் வீடுகளில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்க திட்டமிட்டனர். அப்போது தான், நேரத்தை மட்டும் காட்டாமல், அலாரம் அடித்து, எழுப்பும் விதத்தில், உருவாக்கினர்* முதலில் கை கடிகாரத்தை, ஆண்கள் மட்டுமே பயன்படுத்தினர். பிறகு, பெண்களுக்கேற்ற, 'லேடீஸ் வாட்ச்'கள், தயாராயின* கை கடிகாரம் பெருமளவு விற்பனையாக, பெண்கள் தான் காரணம். தின உபயோகம், விழாக்களுக்கு, அலுவலகத்திற்கு என்று, பல விதமாக பயன்படுத்துகின்றனர்* பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் போது, பெரும்பாலும் கருப்பு நிற பட்டை வாட்ச்களையே அணிகின்றனர் * அலுவலகம் செல்லும் போது, மெட்டாலிக் வாட்ச்கள் பயன்படுத்துகின்றனர் * விருந்து, விழாக்களுக்கு, அழகிய வேலைப்பாடுடன் கூடிய, தங்கம், வெள்ளி கற்கள் பதித்தவைகளை அணிகின்றனர்* வளையல், பிரேஸ்லெட் மாடல் வாட்ச்களை தான், 'டீன் - ஏஜ்' பெண்கள் விரும்புகின்றனர்* பிரபலமான, 'வாட்ச்' நிறுவனங்கள், உலகம் முழுவதும் பயணித்து, பெண்களின் விருப்பங்களை சர்வே எடுத்து, அதன் அடிப்படையில், புதிய மாடல், 'வாட்ச்'களை அறிமுகம் செய்கிறது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !