மானம் கெட்ட தயிர்!
ஒருசமயம், தியாகராஜ பாகவதருக்கு பிரமுகர் ஒருவர் வெளியூரில் விருந்து வைத்தார்.சாம்பார், ரசத்துக்குப் பிறகு கெட்டித்தயிர் பரிமாறப்பட்டது. அதனை சாதத்தில் விட்டு பிசைந்து, விரும்பிச் சாப்பிட்ட பாகவதர்-''நாங்களும் சென்னையில் தயிர் சாப்பிடுகிறோம். என்ன பிரயோஜனம். அது மானங்கெட்ட தயிர்!'' என்றார்.அவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.''மானங்கெட்ட தயிரா? அது என்ன தயிர்?'' என வியப்புடன் பார்த்தனர்.''இந்த தயிரில் உள்ள ஆடை கையைப் பிசுபிசுக்க வைக்கிறதே! ஆனால், எங்களது சென்னைத் தயிரில் ஆடை ஏது, வாடையும் ஏது?'' என்று அவர்களது வியப்பைப் போக்கினார்.சென்னையில், பரிமாறப்படும் தயிர் ஆடை நீக்கிய பாலில் தோய்க்கப்படுவதை சிலேடையாகக் கூறிய பாகவதரின் நகைச்'சுவை'யை கேட்டு, மக்கள் 'என்ஜாய்' செய்தனர்.