வாழைத்தண்டு மோர்!
தேவையான பொருட்கள்:வாழைத்தண்டு - 1 துண்டுகெட்டித் தயிர் - 1 கப்தண்ணீர், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, கெட்டித் தயிர், கறிவேப்பிலை, இஞ்சியுடன் அரைத்து, தண்ணீர் சேர்க்கவும். இதை வடிகட்டி, உப்பு சேர்க்கவும். சுவை மிக்க, 'வாழைத்தண்டு மோர்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி குடிப்பர். கோடை காலத்துக்கு உகந்தது. தாகத்தை தணிக்கும். - எம்.நிர்மலா, புதுச்சேரி.