உள்ளூர் செய்திகள்

பெரிங் நீர்பாலம்!

அமெரிக்காவில் அலாஸ்கா மற்றும் வடதுருவ பகுதி இடையே உள்ளது, பெரிங் கடல். பசிபிக் பெருங்கடலின் வட பகுதியில் அமைந்துள்ளது. இதில், ஏராளமான தீவுகள் உள்ளன. அவற்றை ஒட்டி கடல் பகுதியில் பல பள்ளத்தாக்குகளும் உள்ளன. இந்த பகுதி நீர்நிலையாகவும், கண்டத் திட்டுக்கள் போல் சாய்ந்தும், குறைந்த ஆழத்தில் உள்ளது. தொல் பழங்காலத்தில் இங்கு நிலப்பரப்பு உயர்ந்திருந்ததால், கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து, மனிதர்கள் வட அமெரிக்காவுக்கு நடை பயணமாக இடம் பெயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகுதியை, 'பெரிங் நிலப்பாலம்' என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இது, அமெரிக்க பழங்குடியினரான செவ்விந்தியரின் மூதாதையர், ஆசியாவை சேர்ந்தவர் என்ற கருத்தை உறுதி செய்கிறது. அலாஸ்காவை, கி.பி.,1728ல் கண்டறிந்தவர், வைட்டல் பெரிங். இவர் ஐரோப்பிய நாடான டென்மார்க்கை சேர்ந்தவர். இவரது நினைவாகதான், இந்த கடல் பகுதி, பெரிங் கடல் என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !