ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால! (3)
ஹாய்... ஹாய்...ஹவ் ஆர் யு சில்ரன்? இவ்ளோ ஆர்வமான சில்ரனை நான் பார்த்ததே இல்லை. போன வாரம் என்ன பார்த்தோம்? Adverb, Adjectives இல்லயா? இந்த Adverbல் பல வகைகள் உண்டு தெரியுமா? முக்கியமாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?ஒரு செயல் நடைபெறும் காலம், இடம், தன்மை அதாவது விதம் இவைகளை தெரிவிக்க, Adverb பயன்படுகின்றன. முக்கியமான Main verbகளின் அருகில் Adverb இடம் பெறும்.நேரத்தை குறிக்கும் Adverb சிலவற்றை இங்கே கொடுக்கிறேன். சரியா?Ago - முன்பு.Once in a week - வாரத்திற்கு ஒருமுறை.Often - அடிக்கடி.Frequently - அடிக்கடி.Again and Again - திரும்பத் திரும்ப. இடத்தைக் குறிக்கும் AdverbEvery Where - எல்லா இடத்திலும்.Far away - மிகத் தொலைவில்.Back ward - பின்னால்.No where - எங்கேயுமில்லை.Closely - நெருக்கமாக.தன்மையைக் குறிக்கும் AdverbGenerally - பொதுவாக,Luckily - அதிர்ஷ்டவசமாக,Excellently - சிறப்பாக,Willingly - இணக்கமாக,Sensibly - புத்திசாலித்தனமாக,நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன். Adverb எல்லாம் பெரும்பாலும் lyயில் முடியும் என்று. ஞாபகம் இருக்கா...''எஸ்... மிஸ்... அப்போ lyயில் முடியாத சில Adverbs சொல்லுங்க மிஸ்...'' வெரிகுட்... ரொம்ப புத்திசாலியான கேள்வி இது. இப்படித்தான் கேள்வி கேட்கணும். அப்போதான் வர்ஷிதா மிஸ்க்கு பிடிக்கும்.lyயில் முடியாத AdverbYes - ஆமாம்.No - இல்லை.Sorry - மன்னிக்கவும்.Too much - மிகவும் அதிகம்.Well - நலம்.ஓ.கே., வா... இதையெல்லாம் ஞாபகம் வச்சிக்கோங்க...அடுத்து நாம பார்க்கப்போறது Preposition (வேற்றுமை உருபுகள்) அதாவது ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்கப்பயன்படும் இடைத்தரகர்கள் இவை. மிகவும் முக்கியமானவர்களும் கூட. 1. நான் சினிமா போனேன் என்றா சொல்கிறோம். நான் சினிமாவுக்கு போனேன்.2. கிறிஸ்டினாவை பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன்.3. நான் கடைக்குப் போனேன்.இந்த க்கு, ல், குப், வுக்கு என்ற சிறிய வார்த்தைகள்தான் எத்தனை அர்த்தத்தை கொடுக்கின்றன பார்த்தீர்களா? இவைதான் Prepositions எனப்படும். to, from, till, beyond, at, on, of, between.சரி... இத்துடன் போதும் என்று நினைக்கிறேன். இதை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.பேசிப் பழக சின்ன சின்ன வாக்கியங்கள்!Come near - கிட்டே வா.Wait Outside - வெளியில் நின்றிரு.Go up - மேலே வா.Go away - போய்விடு.Clean properly - நன்றாக சுத்தம் செய்.Go at once - உடனே போ.Do try again - மறுபடியும் முயற்சி செய்.ஸீயு! நெக்ஸ்ட் வீக் -வர்ஷிதா மிஸ்!