கருப்பு உளுந்து கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்:கருப்பு உளுந்து - 1 கப்பச்சை மிளகாய் - 3இஞ்சி, மஞ்சள் பொடி, கடுகு, காரப்பொடி, பொருங்காயத்துாள், தண்ணீர், கறிவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:கருப்பு உளுந்தை, அரை மணி நேரம் நீரில் ஊற விட்டு தோல் நீக்காமல், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். அந்த மாவை, இட்லி தட்டில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்தவும்.வாணலியில், கடுகு தாளித்து, பெருங்காயத் துாள், மஞ்சள், காரப்பொடி சேர்த்து, உதிர்த்த மாவை போட்டு லேசாக பிரட்டி இறக்கவும்; அதை கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைக்கவும். சுவைமிக்க, 'கருப்பு உளுந்து கொழுக்கட்டை!' தயார்.இடுப்பெலும்புக்கு வலு சேர்க்கும்: உடல் ஆரோக்கியம் தரும்!- அனுராதா ரமேஷ், புதுச்சேரி.