உள்ளூர் செய்திகள்

ப்ளூ டூத்!

வரலாற்றில், 'ப்ளூடூத்' என்ற பெயரில் ஒரு மன்னர் இருந்தார். அவர், ஐரோப்பாவில் ஸ்காண்டிநேவிய நாடுகளை ஒருங்கிணைத்தவர்.அதுபோல இன்று, தொடர்பு கருவிகளை இணைப்பதற்கு பயன்படும் தொழில் நுட்பத்தை, 'ப்ளூடூத்' என, அந்த மன்னன் பெயரிலேயே அழைக்கின்றனர்.அமெரிக்கா, முதன் முதலில் கண்டுபிடித்தது, 'மொபைல் அனலாக்' முறை. இதை தொழில்நுட்ப வகையில், '1ஜி' என்கின்றனர். இதில், 'ஜி' என்றால், 'ஜெனரேஷன்' என்ற ஆங்கில சொல்லின் முதல் எழுத்து. அதாவது, அலைபேசி தொழில் நுட்பத்தில், முதல் தலைமுறை எனப்படுகிறது; இன்று, '5ஜி' வரை வந்துள்ளது. அலைபேசி, இணையம், ஆடியோ, வீடியோ, மல்டிமீடியா என, எல்லாவற்றிலும் ஒரே மாதிரி செய்தி பரிமாற்றம் செய்யலாம். இதில், ப்ளூடூத் என்பது ரேடியோ அலைகளை பயன்படுத்தும் தொழில்நுட்பம். இணையம் வழியாக, கீ - போர்டு, பிரின்டர், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை, ரிமோட் வழியாக, உலகின் எந்த மூலையில் இருந்தும் கட்டுப்படுத்தலாம்.இதை பயன்படுத்த ஒவ்வொரு பொருளுக்கும், ஒரு டெக்னிக்கல் முகவரி தரப்படும். அதை இயக்க ரகசியமும், பாதுகாப்பும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியது, எரிக்சன் என்ற ஐரோப்பிய நிறுவனம். பின், ஐ.பி.எம்., இன்டெல் மற்றும் கிழக்காசிய நாடான ஜப்பான் தொழில்நுட்ப கருவி உற்பத்தி நிறுவனங்களும் சேர்ந்தன. எதிர்காலத்தில் கேபிள் இன்றி, எல்லாம் காற்றில் இயங்கும் நிலை ஏற்படும். அது தான், ப்ளூடூத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி என கூறப்படுகிறது.- அண்ணா அன்பழகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !