உள்ளூர் செய்திகள்

மினி ஸ்டோரி! எலும்பு!

ஓநாயொன்று இறைச்சி சாப்பிடும்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக்கொண்டது. எத்தனையோ மிருகங்களிடம் அதை எடுத்து விடும்படி கெஞ்சியும் எந்த விலங்கும் அதற்கு உதவ முன்வரவில்லை.நீண்ட கால்களும், கூரிய அலகும் கொண்ட நாரை, இரக்கப்பட்டு ஓநாயின் தொண்டையில் சிக்கிய எலும்பை எடுத்துவிட்டது.ஓநாய் கோபத்துடன், ''உனக்கு என்மேல் எத்தனை நாளாய் ஆத்திரம் இருந்ததோ? இப்போது தீர்த்துக் கொண்டாய். உன்னுடைய அலகு என் குரல் வளையை எப்படிக் கிழித்திருக்கிறது பார்! உன்னை நான் சும்மா விடப்போவதில்லை!'' என்று அதன் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.துஷ்டர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வதும், உதவிசெய்வதும் உயிருக்கே அபாயம் விளைவிக்கும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !