பிரண்டைதுவையல்!
தேவையான பொருட்கள்:பிரண்டை - 1 கைப்பிடிகாய்ந்த மிளகாய் - 8பூண்டு - 5 பல்சின்ன வெங்காயம் - 5உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிநெய், புளி, உப்பு, வெல்லம், கருஞ்சீரகம் - சிறிதளவுபெருங்காயம், கடுகு, நல்லெண்ணெய், கருவேப்பிலை - தேவையான அளவு.செய்முறை:இளம் பிரண்டையை கணு நீக்கி, சிறு துண்டுகளாக்கி, எண்ணெயில் வதக்கி நன்றாக அரைக்கவும். வாணலியில், எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, பூண்டு, சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தை வறுக்கவும்.இவற்றை அரைத்து, பிரண்டை விழுதுடன் சேர்த்து வதக்கவும். வெந்து கருநிறமானதும், எண்ணெய் பிரியும். அப்போது, சிறிது வெல்லம் சேர்த்து கிளறி இறக்கி, இரண்டு தேக்கரண்டி நெய் கலக்கவும். சுவைமிக்க, 'பிரண்டை துவையல்' தயார். இதை, 12 மணி நேரம் ஆற விட்டு, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றில் தங்கும் புழு, பூச்சிகளை வெளியேற்றி நலம் காக்கும்.- எம்.இந்திராணி, சிதம்பரம்.தொடர்புக்கு: 93443 59484