பாலக் பூரி!
தேவையான பொருட்கள்:பாலக்கீரை - 1 கட்டுகோதுமை மாவு - 3 கப்பச்சை மிளகாய் - 5பூண்டு - 10 பல்சீரகம் - 1 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:சுத்தம் செய்த பாலக்கீரையை, நீரில் வேகவைத்து வடிகட்டவும். வெந்த கீரையுடன், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அந்த கலவையை, கோதுமை மாவுடன் பிசைந்து, பூரியாக உருட்டவும்.அதை எண்ணெயில் வேக வைக்கவும்; சத்தான, சுவைமிக்க, 'பாலக் பூரி' தயார். தேங்காய் சட்னி மற்றும் தயிர் பச்சடியுடன் காலை, இரவு சிற்றுண்டியாக உண்ணலாம். கீரையில் வடித்த நீரை, உப்பு, மிளகுத்துாள் சேர்த்து, சூப் தயாரித்து பருகலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.- ஆ.ரா.கிருத்திகா, சென்னை. தொடர்புக்கு: 97514 44400