உள்ளூர் செய்திகள்

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (52)

ஹலோ மாணவாஸ்... ஹவ் ஆர் யு?'வர்ஷி மிஸ்... Grammer படிச்சி படிச்சி, 'டயர்ட்' ஆகிட்டோம். குட்டி குட்டி வார்த்தைகளில் சுலபமான ஆங்கிலம் பேச கற்றுத்தாங்க ப்ளீஸ்... என்று கேட்டிருந் தீர்கள். என் 'ஸ்டூடன்ட்ஸ்'சின் விருப்பம் தானே, என் விருப்பம். உங்கள் விருப்பப்படியே சொல்லித் தர நான் ரெடி. அதை கற்றுகொண்டு பேச நீங்க ரெடியா?1. What is the matter? - என்ன விஷயம்?2. Shall we begin? - ஆரம்பிக்கலாமா?3. Do you know one thing? - உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?4. What is the quarrel about? - என்ன சண்டை?5. What brings you hear? - எதற்காக வந்தீர்கள்?6. Have you any business with me? - உங்களுக்கு என்னிடம் ஏதேனும் வேலை இருக்கிறதா?7. What is your opinion? - உங்கள் கருத்து என்ன?8. How are the children? - குழந்தைகள் நலமா?9. Why do you trouble yourself? - உங்களுக்கு எதற்கு சிரமம்?10. Mom! where have you kept my clothes? - அம்மா என் துணிகளை எங்கே வைத்திருக்கிறீர்கள்?11. Which is the best shop here? - இங்கே நல்ல கடை எது?12. Its not cold today. - இன்று குளிர் இல்லை.13. We are not late today. - இன்று நாங்கள் தாமதமாக வரவில்லை.14. I don't ask anything. - நான் ஒன்றும் கேட்பதில்லை.15. This dress is mine. - இந்த உடை என்னுடையது.16. She has not come yet. - அவள் இன்னும் வரவில்லை.17. I may reach there at about 5 '0' clock. - நான் அங்கே சுமார், 5.00 மணிக்கு சென்றடைவேன்.18. Please wait here till I come. - நான் வரும் வரை தயவு செய்து இங்கே காத்திருங்கள்.19. I shall meet my mother next month. - நான் என் தாயாரை அடுத்த மாதம் சந்திப்பேன்.20. Please don't be alarmed by the news. - இச்செய்தியை கேட்டு பயப்படாதீர்கள்.21. She is well versed in dance. - அவள் நடனத்தில் சிறந்தவள்.22. Will you give me whatever I want? - நான் கேட்பதையெல்லாம் நீ கொடுப்பாயா?23. It is not my turn - இது என் முறையல்ல.24. It doesn't matter to me. - இது எனக்கொரு விஷயமே இல்லை.25. Its raining heavily. - பெருத்த மழை பெய்கிறது.26. What can be done now? - இப்போது என்ன செய்ய முடியும்?27. You are mistaken. - நீ தப்பாக நினைத்துள்ளாய்.28. My work is not yet over. - இன்னும் என் வேலை முடியவில்லை.29. We have come too earlier. - நாங்கள் ரொம்ப சீக்கிரமாக வந்துவிட்டோம்.30. Its soiled. - இது அழுக்காக இருக்கிறது.போதுமா... படித்துவிட்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிப் பேசி பாருங்கள் மாணவாஸ்!Until then Bye! byeVarshitha.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !