ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (9)
ஹாய்... குட்மார்னிங் ஸ்வீட்டீஸ்... Singular - Pluralல இவ்ளோ விஷயங்கள் இருக்கா என கேட்டிருந்தீர்கள். ஆமாம்! ஆமாம்... இன்னும் இருக்கு முடியல பட்டூஸ்...'ஹையோடா!' என நீங்க கத்துறது எனக்குத் தெரியுது? ஆனா... ரொம்ப இன்ட்ரஸ்டிங்ஆ இருக்கும்... ஸோ.... No fear ok!Lets go to the lesson...Y என்று முடியும் பெயர் சொற்கள் பெரும்பாலும், IES சேர்த்துப் பன்மையாக மாறும்.Fly - FliesBaby - Babies.அதேபோல் F அல்லது FEயை கொண்டு முடியும் சொற்கள் Ves சேர்த்து பன்மையாக மாறும்.Wife - மனைவி, - Wives - மனைவிகள்Knife - கத்தி, -Knives கத்திகள்இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.Roof - RoofsBelief - BeliefsSafe - Safesஒருமை - பன்மை இரண்டிலும் ஒரே மாதிரி இருக்கும் சில சொற்களைச் சொல்கிறேன். அதையும் தெரிஞ்சிக்கோங்க.1.Deer - மான், Deers - அல்ல.2.Pair- ஜோடி, Pairs - அல்ல.one pair, two pair என்றுதான் சொல்லணும்.Hundred - One hundred, two hundred என்றுதான் சொல்லணும். Two hundreds என்று சொல்லக்கூடாது.இன்னொரு விஷயம் சில பெயர்சொற்களுக்கு ஒருமை கிடையாது. புரியலியா?1.Scissors (சிசர்ஸ்) - கத்திரிக்கோல்.2.News - செய்தி/செய்திகள்.3.Thanks - நன்றி.ஒருமை,- பன்மையில் மாறி வரும் சில வார்த்தைகள்!1.Man - மனிதன்,- Men - மனிதர்கள்.2.Ox - எருது, - Oxen - எருதுகள்.3.Woman - பெண், -Women - பெண்கள்.'வுமன்' என்பதை பன்மையில் சொல்லும் போது, 'விமன்' என சொல்லணும். சரியா?அடுத்து நாம பார்க்கப்போறது,Be verbs.அப்படின்னா என்ன தெரியுமா?Be என்றால், 'இரு' என்று பொருள்படும். இவற்றை, Linking verbs என்றும் 'ஹெல்பிங் வெர்ப்' என்றும் சொல்வர்.am, is, are, was, were, will be, shall be இவையெல்லாம் Be verbs தான்.Am, is, are என்பதும் Be verb என்பதும் ஆங்கிலத்தில் ஒன்றுதான். Beக்கு பதிலாக, வாக்கியத்தில் உபயோகிப்பதற்காக, அந்த இடத்தில் Am, is, are ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். புரியலியா?I - வரும்போது லிங்கிங் வெர்ப் - AmHe, she, it, வரும்போது லிங்கிங் வெர்ப் - IsWe, you, they, வரும்போது லிங்கிங் வெர்ப் - Are என்று வரும்.ஒருவர் அல்லது ஒரு செயலைச் செய்வதை குறிப்பது Auxiliary Verbs ஆகும்.I - நான் என வந்தால், Am - இருக்கிறேன்.We - நாங்கள் என வந்தால் Are -இருக்கிறோம்.You - நீ என வந்தால் Are - இருக்கிறாய்.They - அவர்கள், அவை என வந்தால் Are - இருக்கிறார்கள், இருக்கின்றன.He - அவன் என வந்தால் Is - இருக்கிறான்.She - அவள் என வந்தால் Is - இருக்கிறாள்.It - இது/அது என வந்தால் Is - இருக்கிறது.அதாவது, I, we, you,they, he, she, it ஆகியவை Pronouns. Am, Are, Is ஆகியவை, Linking verbs. இவை இரண்டு மட்டுமே இணைந்து அடிப்படை வாக்கியங்களை உருவாக்க முடியும்.உதாரணமாக,I am - நான் இருக்கிறேன்.We are - நாங்கள் இருக்கிறோம்.You are - நீ இருக்கிறாய்?They are - அவர்கள் இருக்கிறார்கள்?He is - அவன் இருக்கிறான்.She is - அவள் இருக்கிறாள்.It is - இது/அது இருக்கிறதுபேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!May I use your phone? - உன் போனை நான் உபயோகிக்கலாமா?May I disturb you? - குறுக்கிட்டு பேசலாமா?Let me go - என்னைப் போகவிடு.May I go - நான் போகட்டுமா?May I join you? - நானும் உங்களுடன் வரட்டுமா?Go yourself - நீயாகவே போ!Rest assured - நம்பியிருங்கள்!போதுமா? ஸீ யு நெக்ஸ்ட் வீக்வர்ஷிதா மிஸ்!