உள்ளூர் செய்திகள்

கேக் இல்லாம கிறிஸ்துமஸா?

இது 'பிளாக் பாரஸ்ட் கேக்' டைம்.தேவையானவை: மைதா மாவு - 500 கிராம், வெண்ணெய் -500 கிராம், பொடித்த சர்க்கரை - 500 கிராம், கோழி முட்டை - 10, பேக்கிங் பவுடர் -5 டீஸ்பூன், கோகோபவுடர் - 150 கிராம், செர்ரீபழம் - 100 கிராம், முந்திரிப் பருப்பு - 100 கிராம், சுல்தானாஸ் - 100 கிராம், சர்க்கரைப் பாகு - 4 அவுன்ஸ், வெனிலா எசன்ஸ் - 6 டீஸ்பூன்.செய்முறை: மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலித்து கொள்ள வேண்டும். வெண்ணெயை நன்றாக அடித்து கொள்ள வேண்டும். அதில் சர்க்கரைப் பொடியை சிறிது சிறிதாக போட்டு அடிக்க வேண்டும்.முட்டைகளை உடைத்து வெண்கருவை தனியாகவும், மஞ்சள் கருவை தனியாகவும் நுரை பொங்க அடித்து கொள்ள வேண்டும்.மைதா கலவையோடு பழத்துண்டுகள், முந்திரி பருப்பு, எசன்ஸ் முதலியவற்றை சேர்த்து கலக்கவும். பின் வெண்ணெய் கலவையையும், முட்டைக் கலவைகளையும் சேர்த்து நன்றாக கலவையானதும் சர்க்கரைப் பாகையும் சேர்த்து, இட்லி மாவு அளவில் கலவையை தயாரித்து கொள்ள வேண்டும்.பாத்திரத்தில் டால்டா தடவி பின் அடுப்பில் ஏற்றி சிறு தீயில் ஒரு மணி நேரம் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தபின் இறக்கி ஆற வைக்க வேண்டும்.பிளாக் பாரஸ்ட் கேக் ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !