உள்ளூர் செய்திகள்

குளிர் முட்டை!

முட்டையை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிப்பது குறித்து, பல ஆய்வுகள் நடந்துள்ளன. அது, ஆரோக்கியமற்றது என சமீபத்திய ஆராய்ச்சி நிறுவியுள்ளது.அறை வெப்ப நிலையில் பராமரிப்பதை விட, குளிர்சாதனப் பெட்டியில் பராமரிக்கும் முட்டை விரைவில் கெட்டு விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ச்சியான இடத்தில் முட்டையை பராமரித்தால், திரிந்து கெட்டுப் போய் விடும். அதை, அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்தால், ஓட்டில் உள்ள துளைகள் வழியே, பாக்டீரியா வேகமாக புகுந்து, முட்டையில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு.முட்டையை வாங்கிய உடனே, சமைத்து விட வேண்டும்; அல்லது அறை வெப்ப நிலையிலேயே சில நாட்கள் பராமரிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !