உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

பல்லுக்கு பலம்!வேப்பிலை, மாவிலை இரண்டையும் சம அளவெடுத்து காய வைத்து பொடிக்கவும். இந்தப் பொடியை பல் தேய்க்கும் பொடியாக பயன்படுத்தலாம். ஈறில் ரத்தம் வருதல், பல் வலி, துர்நாற்றம் ஆகியவை குணமாகும்.பார்லியின் பலன்!பார்லி தண்ணீரில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டை போட்டு ஒரு துளி நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வர, நீண்ட நாள் காய்ச்சல், உடல் நடுக்கம், தலை பாரம் அனைத்தும் ஓடி விடும்.நெல்லி எலும்பு!வெந்த நெல்லிக்காயை வெல்லபாகில் ஊற வைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு வாரம் வைக்கவும். ஊறின காயை தினமும் ஒன்று வீதம் ஒரு மாதம் சாப்பிட்டால் எலும்புகள் நன்கு வலுவடையும்.கற்றாழை சாறு!காற்றாழைச் சாறுடன் வெண்ணெய் கலந்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மூலச்சூடு போன்ற பிரச்னைகள் வரவே வராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !