நமுத்து போகாதசிப்ஸ்!
உணவுப் பொருளான, 'சிப்ஸ்' உறையில் அடைக்கும் போது, ஆக்சிஜன் கலந்த, 'கான்சன்ட்ரேட்டட் நைட்ரஜன்' என்ற வாயுவும் நிரப்பப்படுகிறது. இந்த வாயுவால் சிப்ஸ் நமுத்துப் போவதில்லை. சிப்ஸ் மெல்லும் போது, 'கரக்... முரக்...' சத்தம் வருவது இதன் உபயமே! சில நேரம், உணவு விஷமாக இந்த வாயுவே காரணம். வீட்டில் அவ்வப்போது செய்த சிப்ஸ், சாப்பிட்டால் விபரீத விளைவு எதுவும் ஏற்படாது. - மல்லிகா குரு, சென்னை.