உள்ளூர் செய்திகள்

முட்டை வட்டலப்பம்!

தேவையான பொருட்கள்:முட்டை - 6தேங்காய் பால் - 250 மி.லி.,சர்க்கரை - 200 கிராம்முந்திரி, திராட்சை - 50 கிராம்ஏலக்காய் பொடி - சிறிதளவு.செய்முறை:முட்டையை உடைத்து, நன்றாக அடித்துக் கொள்ளவும். அதில், சர்க்கரை, தேங்காய் பால், திராட்சை, முந்திரி, ஏலக்காய் பொடியை கலக்கவும்.இட்லி பானையில், தண்ணீரை, கொதிக்க விடவும். மிதமாக கொதித்ததும், முட்டை கலவையுள்ள பாத்திரத்தை, இட்லி பானைக்குள் வைத்து மூடவும். அரை மணி நேரத்திற்குப் பின், இறக்கவும். ஆறிய பின், அல்வா துண்டுகள் போல் வெட்டிக் கொள்ளவும். ருசியான, முட்டை வட்டலப்பம் தயார்.மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகள் விரும்புவர்.- ம.நிஸ்ஸா, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !