உள்ளூர் செய்திகள்

அனுபவம் புதுமை!

விண்வெளியில் பறந்து சாதனை புரிவதற்காகத் தேர்வு செய்யும் இறுதிக் கட்டத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரின், டிட்டோச் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வந்திருந்தனர். அப்போதைய திட்டப்படி இறுதியாக இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்ததால், ஒரு தேர்வு வைக்க விரும்பி, அவர்கள் இருவரையும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தனித் தனியாக தூங்க வைத்தனர். மறுநாள் எழுந்ததும் இருவரது அனுபவங்களையும் கேட்டனர். யூரிகாகரின் விழிப்போடு இருந்ததால், தனக்கு அந்த வயரிலான கட்டிலில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். டிட்டோச் நன்றாகத் தூங்கிவிட்டதால் ஒன்றும் சொல்ல இயலவில்லை.யூரிகாகரின் தேர்வு செய்யப்பட்டு விண்வெளியில் பறந்து சாதனை படைத்தார்.வாவ் சூப்பர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !