உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

வானத்தில் சூரியனைப் பிரதானமாக வைத்து அதைச் சுற்றி வரும் கோள்களை அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.அந்த வகையில் நாம் வாழுகிற பூமியும் சூரியக் குடும்பத்தை சேர்ந்ததுதான். ஏனெனில், பூமியும் சூரியனை மையமாகக் கொண்டுதான் சுழன்று வருகிறது. அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.செவ்வாய் கிரகத்தில் வானம் நீல நிறத்தில் தெரிவதில்லை. அங்கு ஆரஞ்சு நிறத்தில் வானம் தெரியும். சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடம் 14 விநாடிகள்.சூரியனின் மேற் புறத்தில் இருக்கும் வெப்பத்தை விட ஒரு சாதாரண மின்னலில், ஐந்து மடங்கு வெப்பம் வெளிப்படுகிறது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !