உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

இறைச்சி தின்னும் மீன் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? சீனாவின் உள்நாட்டு நதிகளில் இது போன்ற மீன்கள் காணப்படுகின்றன.இவற்றிற்கு, 'பாம்புத்தலை மீன்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. இந்த மீன்கள் அதிக பட்சம், 3 அடி நீளம் வளரும். இந்த மீன்களால் தண்ணீருக்கு வெளியேயும் மூன்று நாட்கள் தொடர்ந்து வாழ முடியும். கரையோரங்களில் இந்த மீன் தனது துடுப்புகளைப் பயன்படுத்தி நடந்து சென்று இரை தேடும்.இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.இது போன்று 100 பாம்புத் தலை மீன்களை சீனாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி ரகசியமாக வளர்த்துள்ளார். அதை 'மேரிலாண்ட்' நகர குளத்தில் விட்டுள்ளார். இதைக் கண்டு பிடித்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள், குளத் தில் உள்ள மற்ற மீன்களிடமிருந்து இந்த பாம்புத்தலை மீன்களை அகற்றிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !