உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

விலங்குகளில் மிகப்பெரியது நீலத்திமிங்கலம்; இது கடற்பாலுாட்டி வகை விலங்கு. அளவு மற்றும் எடையில் இதுவே உலகிலுள்ள மிகப்பெரிய விலங்கு. சராசரியாக, 80 முதல், 100 அடி வரை நீளம் கொண்டது. சாதாரணமாக, 100 அடி நீள நீலத்திமிங்கலத்தின் எடை, 150 டன் வரை இருக்கும். அதாவது, 1.5 லட்சம் கிலோ. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை, 1.73 லட்சம் கிலோ. ஒரு நாளில், 3,600 கிலோ மீன்களை உண்ணும். கடந்த, 1700ம் ஆண்டில் கடலில், 3.5 லட்சம் நீலத்திமிங்கலங்கள் இருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது, 25 ஆயிரம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !