உள்ளூர் செய்திகள்

தவளை ஞானம்!

ஞானம் அடைந்த குரு ஒருவர், தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது, தவளை ஒன்று, விடாமல் கத்திக்கொண்டிருந்தது. அதன் சத்தம் தியானத்துக்கு இடையூறை தந்தது. கோபம் அடைந்த குரு, ஒரு கல்லை எடுத்து வீசினார். காயம் பட்ட தவளை தத்தி தத்தி மறைந்தது. குருவின் தியான கவனம் பிசகி, தவளைப் பக்கம் போனது. கல் வீசியதை எண்ணி கடும் குழப்பமடைந்த குரு, 'ஒருவேளை, உருக்கமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த தவளை மீது கல்வீசி, அதன் தவத்தை கலைத்து இடையூறு செய்துவிட்டேனோ' என, கலங்கி சிந்தித்தார். தீவிர சிந்தனையின் முடிவில், 'இயற்கையில் நடப்பதை அப்படியே ஏற்க கற்றுக்கொள்வது தான், உண்மையான தியானம்' என்று உணர்ந்தார். தவளையால், அற்புத பாடம் கற்றார் குரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !