உள்ளூர் செய்திகள்

ரத்தினக்கல்!

கோழி ஒன்று குப்பைமேட்டைக் கிளறிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ரத்தினக்கல் தென்பட்டது. அதை ஒதுக்கிவிட்டு குப்பையைக் கிளறியது கோழி. ரத்தினம் சிரித்தது.''என் சிரிக்கிறாய்?'' என்று கேட்டது கோழி.''பின்னே, சிரிக்காமல் என்ன செய்வது? நான் எத்தனை விலை உயர்ந்தவள் தெரியுமா? சீமான்கள் கண்டால் என்னை நகைசெய்து அணிவர். நீ புறக்கணிக்கிறாய்!'' என்றது.''யார் யார் எங்கெங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால்தான் மதிப்பு. உன்னால் என் பசியைத் தீக்கமுடியுமா? அதோ ஒரு பூனையும் கழுதையும் வருகின்றதே! அவற்றின் பசியைத்தான் போக்கமுடியுமா? கோடி ரூபாய் மதிப்புள்ள உன்னைவிட கடுகளவுள்ள தானியமே எனக்குப் பெரிது!'' என்று சொல்லிவிட்டு தானியத்தைக் கொறிக்கத் தொடங்கியது.பெற்றோர் கோபித்துக்கொண்டால் சில பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெருமை வெளியில் நிச்சயம் கிடைக்காது. பெற்றோர் நம் நன்மைக்காகவே எதையும் சொல்வார்கள் என்று பிள்ளைகள் முழுமனதுடன் நம்ப வேண்டும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !