உள்ளூர் செய்திகள்

ராட்சத பாண்டா!

ஆசிய நாடான சீனாவின் மத்திய பகுதி மாகணங்களில் ராட்சத பாண்டக்களைக் காணலாம். அங்கு மூங்கில் காடுகள் அதிகம். இதை, கருப்பு - வெள்ளை கரடி எனவும், கருப்பு - வெள்ளை பூனைக்கால் பிராணி என்றும் அழைப்பர். ராட்சத பாண்டா...* சராசரியாக, 45 முதல், 150 கிலோ வரை எடை இருக்கும் * மூங்கிலைத் தவிர எதையும் சாப்பிடாது* ஒரே நேரத்தில், 28 கிலோ எடை மூங்கில் சாப்பிடும்; அப்போது, 'கடக்... முடக்...' என சத்தம் ஏற்படும்* இந்த இனத்தில் உலகில், 1,864 பாண்டாக்கள் மட்டுமே உள்ளன* உலகில் அருகி வரும் மிருகங்களில் இதுவும் ஒன்று. குளிர்காலத்தில், மலையிலிருந்து இறங்கி வரும். சேமிக்கும் பழக்கமில்லாததால் குளிர்காலம் முழுதும் துாங்கியே கழிக்கும். குளிர் காலம் முடிந்ததும் ஒரே நாளில், 14 மணி நேரம் மூங்கிலை தின்று ஈடு செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !