கோட்டைக்கு போகலாம் வாங்க!
ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளதோ அங்கெல்லாம் மன்னரையும், நாட்டையும் காக்க ஏதுவாய் அருகில் கடலில் காவற்கோட்டைகள் அமைக்கப்படுவது உண்டு. இப்படி ஐரோப்பாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கோட்டைகள் உண்டு!இந்த காவற்கோட்டைகளில் வாழ்நாளில், நிச்சயம் பார்த்தேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ள சில பிரபலமான காவற்கோட்டைகளை பற்றி இப்போது பார்ப்போமா?பிரான்சின் மான்ட் செயின்ட் மைக்கல்!நிலநடுக்கம் சார்ந்து எழுந்த பாறைத்தீவில் இந்த கோட்டை அமைந்துள்ளது. நார் மாண்டி நகரின் கடற்கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் தள்ளி, இந்த காவற்கோட்டை அமைந்துள்ளது. இங்கு கடல் அலைகளின் தாக்கம் அதிகம். தாக்கம் கூடும் போதும், குறையும் போதும் நார்மாண்டி கடற்கரையுடன் துண்டிக்கப்பட்டு பிறகு, தானே மீண்டும் சேர்ந்துவிடும். இது தினசரி நடக்கும் இயற்கையின் விளையாட்டு.ப்ரூசியாவின் மால் பார்க் காவற்கோட்டை!இதன் தரைப்பரப்பளவை வைத்து பார்த்தால் உலகின் மிகப்பெரிய காவற்கோட்டை இதுதான். இது ஒரு செங்கற் கோட்டை.ப்ரூசியாவின் டியூடோனிக் மதிப்புமிக்க படைத்துறை தலைவர்களால் அந்த அற்புதமான கட்டடம் கட்டப்பட்டது.இங்கிலாந்தின் வின்ஸ்டர் காவற்கோட்டை!பெர்க் ஷயரில், வின்ஸ்டர் கோமகன் வந்தால் தங்கும் ராஜ வீடாகவும் இது பயன்பட்டது. பிரிட்டிஷ் ராஜாவின் சந்ததியினருக்கும் இதற்கும் மிக நீண்ட கால தொடர்பு உண்டு. கட்டட கலைக்கும் பிரபலமானது. இந்த காவற்கோட்டையில் 500 பேர் வசித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.நார்தம்பர்லாந்த் ஆல்விக் காவற்கோட்டை!மந்திர, பேய் பிசாசுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் நிச்சயம் விஜயம் செய்ய வேண்டிய காவற்கோட்டை இது!ஹாரிபாட்டரின் கதையின் மாய வித்தைகளை கொண்ட கற்பனை காட்சிகளை படமாக்க இந்த காவற்கோட்டைதான் பயன்படுத்தப்பட்டது. இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்.ஸ்பெயினின் அல்காஷார் (செகோவியா)செகோவியா நகரில், பாய்மர படகின் பாய் மர உச்சி போன்ற அமைப்பைக் கொண்ட கல்மலை யில் எழுப்பப்பட்ட கற்காவற் கோட்டை இது!ஸ்பெயினின் மிக வித்தியாசமான காவற்கோட்டைகளில் இதுவும் ஒன்று! வால்ட் டிஸ்னியின் கற்பனை கோட்டையான, 'சின்டிரல்லா காவற்கோட்டை' இதனை பார்த்து உருவானதுதான்!-ராஜி ராதா!