நெல்லிக்காய் அல்வா!
தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் - 7வெல்லம் - 1 கப்பேரீச்சம் பழம் - 5உலர் திராட்சை - 50 கிராம்ஏலப்பொடி, தண்ணீர், உப்பு - தேவையான அளவு.செய்முறை:நெல்லிக்காயை பொடியாக சீவி, மிதமான சூட்டில் வதக்கி, தண்ணீரில் வேக வைத்து அரைக்கவும். வெல்லத்தில் பாகு எடுத்து வடிகட்டி அதில் சேர்க்கவும். பின், ஏலக்காய் பொடி, உலர் திராட்சை, சிறு துண்டுகளாக்கிய பேரீச்சம் பழம், உப்பு சேர்த்து கிளறவும். சுவை மிக்க, 'நெல்லிக்காய் அல்வா' தயார். அடிக்கடி சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். உடல் வலிமை கிடைக்கும்.- மு.சினேகபிரியா, தேனி.தொடர்புக்கு: 79042 60203