உள்ளூர் செய்திகள்

பச்சை பட்டாணி நெய் தோசை!

தேவையான பொருட்கள்:தோசை மாவு - 2 கப்பச்சை பட்டாணி - 1 கப்கறிவேப்பிலை - 1 கப்பச்சை மிளகாய் - 3பூண்டு பல் - 4இஞ்சி, உப்பு, நெய் - தேவையான அளவு.செய்முறை:வேக வைத்த பச்சை பட்டாணியுடன், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு அரைக்கவும். இதை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல் சூடானதும் நெய் தடவி மாவை ஊற்றவும். திருப்பி போட்டு நன்கு வேக விடவும். நலம் தரும், 'பச்சை பட்டாணி நெய் தோசை' தயார். தொட்டுக் கொள்ள, 'தேங்காய் சட்னி' பொருத்தமாக இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- வி.ரவீந்திரன், ஈரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !