இடாய்ப்பு அணை
இடாய்ப்பு அணை பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பொதுவாக இருக்கிறது. இது பராகுவே நாட்டின் மின் தேவையை 91% அளவுக்கு நிறைவேற்றுகிறது. பிரேசில் நாட்டில் 26% மின் தேவையை ஈடுகட்டுகிறது. இடாய்ப்பு அணை கட்டப்பட்டுள்ள நதி அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது.இடாய்ப்பு என்பது குவாரானி மொழிச் சொல்லாகும். இடாய்ப்பு என்பதன் பொருள், 'பாடும் பாறை, என்பதாகும். இதற்கு அந்தப் பெயர் வரக் காரணம், அந்த இடத்தில் இருந்து வந்த ஒரு, பாறைகளின் மேல் மோதும் நீர் இனிய இசையை எழுப்புவது போல் தோன்றும். இதனை கட்டுமான விந்தை என்று வியக்கின்றனர். இடாய்ப்பு அணை கட்டப்படுவதற் காகத் திசை மாற்றப்பட்ட நதி, உலகின் ஏழாவது பெரிய நதியாகக் கருதப் பட்டது. இது அமைக்கப்படுவதற்காக அகற்றப்பட்ட கல் மற்றும் மண்ணின் அளவு 50 மில்லியன் டன்கள். இந்த அணைக்காக 30 ஆயிரம் பேர் ஈடு படுத்தப்பட்டனர். இந்த அணையின் முக்கியத்துவம் வாய்ந்த எண் 18. இந்த அணையில் 18 மின்னோக்கிகள் இருக்கின்றன. இதன் வேலைகள் முடிய 18 ஆண்டுகள் பிடித்தன. 18 பில்லியன் டாலர் செலவாயிற்று. 2004ம் ஆண்டில், மேலும் இரண்டு மின்னோக்கிகள் பொருத்தப்பட்டன. நீர் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மின் உற்பத்தித் திறன், ஒருகோடியே இருபது லட்சம் கிலோவாட். தற்போது பதினான்கு கோடியே இருபது லட்சமாகும். இதன் தனித் தன்மை, உலகின் மிகப் பெரிய நீர்மின் நிலையம் என்பது. இந்த அணையின் அழகு பயணிகளை ஈர்க்கிறது. 162 நாடுகளைச் சேர்ந்த 9 மில்லியன் பார்வையாளர்கள் இதைக் கண்டு களித்துள்ளனர். இந்த அணையின் நீளம் ஏழாயிரத்து 744 மீட்டர். இந்த அணையின் உயரமான பகுதியின் அளவு 225 மீட்டர். இது புவிஈர்ப்பு விசையால் இயங்குபவை; பாறைகளால் அமைக்கப் பட்டவை. மண்ணால் கரையிடப்பட்டவை என்று பலவகையாக உள்ளன. பரானா என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் அமைப்புப் பணிகள் 1975 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.2000-வது ஆண்டில், இடாய்ப்பு அணை, உற்பத்தி செய்த மின்சக்தியின் அளவு ஒரு கோடியே இருபது லட்சம் கிலோட்வாட். 2000ஆவது ஆண்டில் இடாய்பு அணையின் சாதனை 93.4 பில்லியன் கிலோ வாட். அணை அமைக்கப்படப் பயன்படுத்தப்பட்ட கான் கிரீட்டின் அளவு பிரான்சுக்கும், இங்கிலாந்திற்கும் இடை யிலான சுரங்கப் பாதையை அமைப்பதற்குத் தேவைப்பட்டதைப் போல் 15 மடங்கு. மின் உற்பத்தியைப் பொருத்தவரை, இடாய்ப்பு அணையின் தன்மை தென் அமெரிக்காவிலேயே மிகவும் மலிவான விலையில் மின் உற்பத்தி செய்வதாகும். இடாய்ப்பு அணை கட்டப்பட்டதால் மூழ்கிப்போன அருவி ஸெட் க்வேடாஸ். புனல் மின் நிலையங்களுள் இடாய்ப்பு அணையின் தனித்துவம், உலகின் மிகப் பெரிய நீர் மின் நிலையத்தை கொண்டிருக்கிறது. ***
சேர்ந்த 9 மில்லியன் பார்வையாளர்கள் இதைக் கண்டு களித்துள்ளனர். இந்த அணையின் நீளம் ஏழாயிரத்து 744 மீட்டர். இந்த அணையின் உயரமான பகுதியின் அளவு 225 மீட்டர். இது புவிஈர்ப்பு விசையால் இயங்குபவை; பாறைகளால் அமைக்கப் பட்டவை. மண்ணால் கரையிடப்பட்டவை என்று பலவகையாக உள்ளன. பரானா என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் அமைப்புப் பணிகள் 1975 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.2000-வது ஆண்டில், இடாய்ப்பு அணை, உற்பத்தி செய்த மின்சக்தியின் அளவு ஒரு கோடியே இருபது லட்சம் கிலோட்வாட். 2000ஆவது ஆண்டில் இடாய்பு அணையின் சாதனை 93.4 பில்லியன் கிலோ வாட். அணை அமைக்கப்படப் பயன்படுத்தப்பட்ட கான் கிரீட்டின் அளவு பிரான்சுக்கும், இங்கிலாந்திற்கும் இடை யிலான சுரங்கப் பாதையை அமைப்பதற்குத் தேவைப்பட்டதைப் போல் 15 மடங்கு. மின் உற்பத்தியைப் பொருத்தவரை, இடாய்ப்பு அணையின் தன்மை தென் அமெரிக்காவிலேயே மிகவும் மலிவான விலையில் மின் உற்பத்தி செய்வதாகும். இடாய்ப்பு அணை கட்டப்பட்டதால் மூழ்கிப்போன அருவி ஸெட் க்வேடாஸ். புனல் மின் நிலையங்களுள் இடாய்ப்பு அணையின் தனித்துவம், உலகின் மிகப் பெரிய நீர் மின் நிலையத்தை கொண்டிருக்கிறது. ***