ஜீரண லேகியம்!
காரமும், இனிப்பும் அணிவகுத்து மகிழ்விக்கும் நாள் தீபாவளி. உறவினர்களும், நண்பர்களும் தருவதை எல்லாம் சாப்பிட்டால், வயிறு கொள்ளுமா... மகிழ்ச்சி மடிந்து போகும். இதை தவிர்க்க, பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும், ஜீரண லேகியம் சாப்பிடலாம். இதற்கு தேவையான லேகியப்பொடி, தமிழகம் முழுவதும், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இனி, லேகியம் தயாரிக்கும் முறையை பார்ப்போம்.தேவையான பொருட்கள்:லேகியப்பொடி - 50 கிராம்உலர் திராட்சை - 50 கிராம்நெய் - 100 கிராம்வெல்லம் - 50 கிராம்.பேரீச்சம் பழம் - 3தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை:நெய்யை, வாணலியில் சூடாக்கவும். விதை நீக்கி, பொடியாக்கிய பேரீச்சம் பழம், உலர் திராட்சையை அதில் வறுத்து எடுக்கவும்.வெல்லத்தில், தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். இளம் பாகு பதத்தில், லேகியப் பொடியை கலக்கவும். பின், நெய்யுடன் வறுத்த பழங்களையும் கலந்து இறக்கவும்.நலம் தரும், 'தீபாவளி லேகியம்' தயார். ஆறியதும், டப்பாவில் அடைத்து பாதுகாக்கவும். விருந்தால் ஏற்படும், அசவுரியங்களை தடுக்கும். உடல் நலத்தை காக்கும். தவறாமல் சாப்பிட்டு, நலமுடன் கொண்டாடுங்கள்.