ஜாம்போலின்
நம் நாடு மூலிகையின் அற்புதத்தை அறிந்த நாடாகும். அதிலொன்றுதான் கற்பகப் பழமான நாவல் பழம். இதனுடைய ஒரு சத்தின் பெயர் தான் இந்த ஜாம்போலின். இது நம் உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தும் நாளங்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு மட்டுப்படுகிறது. இந்த நாவல் பழத்தைப் பொடியாக்கி, தினம் மூன்று வேளை நீருடன் கலக்கி சாப்பிட்டு வர சர்க்கரை, (குளுக்கோஸ்) உற்பத்தி குறையும். மேலும், தாக வறட்சியையும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தையையும் நீக்குகிறது. நாவல் பழம் 'ஹிஸ்டீரியா' எனும் மனநோயைக் குணப்படுத்த மிகச்சிறந்த மருந்து.