லும்ப்சக்கர் மீன்!
ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் காணப்படுகிறது.பொதுவாக முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் இந்த வகை ஆண் மீன்கள் ஈடுபடுகின்றன. மோசமான தட்பவெப்ப நிலையில் முட்டைகள் சிதறிவிடும். அப்போது ஆண் மீன் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறது. இந்த வகை மீன்களின் செயல்கள் கோழியின் செயலைப் போன்று காணப்படுவதால் 'கோழிமீன்' என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது.பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியிலும் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.