பறக்கும் பாலூட்டி!
'கலாங்' என்று அழைக்கப்படும் பழ வவ்வால் கள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இந்த வகை வவ்வால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை. இந்த வகை வவ்வாலின் உடல்... அதாவது, தலை முதல் கால் வரை 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும்,900 கிராம் எடையையும் கொண்டது. இந்த வவ்வால்கள் அதிக சக்தி வாய்ந் தவை. எனவே, நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாழைப்பழம் இருக்கிறது என்பதை தன்னுடைய மோப்ப சக்தி மூலம் அறிந்து கொள்கிறது. பழ வவ்வால்கள், நரி போன்று முக அமைப்பைக் கொண்டுள்ளதால், 'பறக்கும் நரிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.இதுபோன்று 'பைபிஸ்ட்ரெலி' என்று அழைக்கப் பட்டும் சிறிய வகை வவ்வால்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. இதன் இறக்கையின் அளவு 152 முதல் 200 மில்லிமீட்டர் வரை உள்ளது. மேலும், 2.5 கிராம் எடை கொண்டது.