தினை மாவு பூரி!
தேவையானப் பொருட்கள்:தினைமாவு - 200 கிராம்கோதுமை மாவு - 50 கிராம்அரிசி மாவு - 25 கிராம்சீரகம் - 2 தேக்கரண்டிநெய் - 25 கிராம்உப்பு - தேவையான அளவு.செய்முறை:தினை, கோதுமை, அரிசி மாவுகளை நன்றாக கலக்கவும். சீரகம், உப்பு, நெய் ஆகியவற்றை அதில் சேர்த்து, பூரி மாவு போல், பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடத்திற்குப் பின், மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரி போல் வார்த்துக் கொள்ளவும். அவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்; சுவையான தினைமாவு பூரி தயார். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.- கே.சொர்ணலட்சுமி, திருவள்ளூர்.