புதினா அவல்!
தேவையான பொருட்கள்:அவல் - 100 கிராம்இஞ்சி - 10 கிராம்தேங்காய் - 2 துண்டுசீரகத்துாள், மிளகுத்துாள் - 1 தேக்கரண்டிதண்ணீர், உப்பு, புதினா இலை - தேவையான அளவு.செய்முறை:புதினா இலையுடன், இஞ்சியை விழுதாக அரைக்கவும். அவலை சுத்தம் செய்து, தண்ணீரில், 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து, புதினா, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்துாள், மிளகுத்துாள், துருவிய தேங்காயை கலக்கவும். சுவைமிக்க, 'புதினா அவல்' தயார். ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் துாண்டும். நார்ச்சத்து அதிகமுள்ளதால், சிறுவர், சிறுமியர் நலனுக்கு உகந்தது.- ஹ.ஜெயலட்சுமி, பழனி.