மழைக்கால நோய்கள்!
கோடைக்காலத்தில், ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால், நோய் உருவாக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு குறைவு. ஆனால், மழைக்காலத்தில், காற்றில், ஈரப்பதம் அதிகரிப்பதால், வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம். நோய் தொற்று அதிகரிக்கும். வைரஸ் நோய்களை தடுக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து, எட்டு முதல், 10 டம்ளர் வரை, தினமும் குடிக்க வேண்டும்.மூச்சுப் பயிற்சி செய்தால், நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.இருமல், தும்மலின் போது, காகிதம், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.காற்றில், ஈரப்பதம் அதிகரிக்கும் போது, அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இதன்மூலம், 'பொட்டாஷியம்' என்ற தாதுப்பொருள், அதிகமாக வெளியேற வாய்ப்பு உண்டு. உடலில், பொட்டாஷியம் குறைந்தால், பலவீனம் ஏற்படும். இதை தடுக்க, காய்கறி, கீரை, தானிய வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆரஞ்சு, வாழைப்பழம் சாப்பிடலாம். கீரை, காய்கறி சூப் குடிக்கலாம்.வரும் அக்டோபர் மாதம் இங்கு மழை தொடங்கும்!