உள்ளூர் செய்திகள்

மம்மீஸ் ஹெல்த் கிச்சன்

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். மில்கி தோசா!ஒரு கப் பாலில், அரிசி மாவு 1/2 கப், துருவிய தேங்காய் 1/4 மூடி, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக கலக்கி அதை, தோசை சுட்டு சாப்பிட்டால் ருசியோ ருசிதான்.உடல்நிலை சரியில்லாத நேரத்தில், பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த தோசை சுட்டு தந்தால், 'ஒன்ஸ் மோர்' என்று விரும்பி கேட்டு சாப்பிடுவர். பெரியவர்களுக்கும் இது பிடிக்கும். இதற்கு வெங்காய சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.- வி.கிருஷ்ணவேணி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !