மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!
பொட்டுக்கடலை உருண்டை!தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், முந்திரி - 25 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், நெய் - சிறிதளவு, ஏலக்காய் - 5.செய்முறை: முதலில் பொட்டுக் கடலையை வாணலியில் லேசாக வறுத்து, சூடு ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். அதன்பின், வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சையை லேசாக வறுத்துக் கொள்ளவும். இப்போது அந்த மாவுடன் வறுத்த முந்திரி, உலர் திராட்சை பொடித்த ஏலக்காய் எல்லாவற்றையும் கலந்து, சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்தால் பொட்டுக்கடலை உருண்டை தயார். இது செய்வதும் மிகவும் எளிது. பொட்டுக்கடலையில் இரும்பு சத்து இருப்பதால், உடலுக்கு ஆரோக்கியமானது.- என்.ஜானகி, மதுரை.