மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். தினை அல்வாதேவையான பொருட்கள்:தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய் தூள், சுக்குத்தூள் தலா - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை - 10 கிராம், பாதாம் பருப்பு - 10 கிராம், நெய் - 100 கிராம்செய்முறை:தினை அரிசி மாவுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பின், சட்டியில் நெய்யை விட்டு, சூடாக்கி கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாக கிளறவும். இந்த கலவையானது கட்டி சேராத வண்ணம் இடைவிடாமல் கிளறி, சிறிது சிறிதாக நெய்யை சேர்க்கவும்.சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை, சுக்குதூள் மற்றும் ஏலக்காய் தூள் இவற்றை தூவி இறக்கினால், தித்திக்கும் தினை அல்வா ரெடி.இந்த தினை அல்வா சத்து நிறைந்தது. இதில், புரத சத்து, நார் சத்து மற்றும் மாவு சத்தும் அதிகம் இருக்கிறது. இது உடலுக்கு மிகவும் நல்லது.- ஆர்.மைதிலி, சென்னை.