உள்ளூர் செய்திகள்

மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பம்கின் அல்வா!தேவையான பொருட்கள்: பூசணிக்காய் - 3 துண்டுகள், வெல்லம் - 100 கிராம், நெய் - தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தேவையான அளவு.செய்முறை:பூசணிக்காயை துறுவி நன்கு பிழிந்து கொள்ளவும். வாணலில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுக்கவும். பின், பூசணிக்காயை அதில் சேர்த்து நன்கு கிளறவும். கெட்டிப் பதம் வந்தவுடன் வெல்லத்தை சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், நெய் ஊற்றி இறக்கவும். பூசணிக்காயில் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. இதை சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பர்.- அ.ரூபினா, நெய்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !