மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.ரவா பர்பி!தேவையான பொருட்கள்:வறுத்த பொடி ரவை - 100 கிராம்,நெய் - 100 கிராம், ஏலம் - சிறிதளவு,சீனி - 400 கிராம், பால் - 800 மி.லி.,செய்முறை: வறுத்த ரவையுடன், மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, மைசூர் பாகு பதத்தில் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, ஒரே அளவில் பரப்பி, வில்லைகளாக போட்டால், அருமையான ரவா பர்பி ரெடி.இந்த பர்பியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.-க.நாகமுத்து, திண்டுக்கல்.