உள்ளூர் செய்திகள்

வேப்பம்பூ வடை!

தேவையான பொருட்கள்:வேப்பம்பூ - 50 கிராம்கடலைப் பருப்பு - 1 கப்பெரிய வெங்காயம் - 2காய்ந்த மிளகாய் - 2பூண்டு பல் - 10 சோம்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவுஇஞ்சி, உப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:கடலைப்பருப்பை சுத்தம் செய்து, நீரில் ஊற வைக்கவும். அதனுடன், வேப்பம்பூ, நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.அந்த மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'வேப்பம்பூ வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்புவர்.- பி.பாரதி, திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !