புத்தாண்டு நம்பிக்கைகள்!
புத்தாண்டில் நெருப்பு மூட்டி, வணங்கி தாண்டும் போது, செய்த தவறுகள், பாவங்கள், தீக்கிரையாவதாக நம்புகின்றனர், வட ஆப்பிரிக்கர்கள்.கரிய முடியடன் உயரமான மனிதரைப் பார்த்தால், ஆண்டு முழுவதும், அதிர்ஷ்டம் என, நம்பினர் ரோமானியர்கள்.'கார்ப்' என்ற மீனை சமைத்து உண்டால், ஆண்டு முழுவதும் சக்தி, சுறுசுறுப்பு கிடைப்பதாக நம்புகின்றனர் கிழக்காசியாவில் வசிக்கும் ஜப்பானியர்கள்.பட்டம் விட்டு அது வானில் பறப்பது போல, பேரும், புகழும் கிடைக்கும் என, நம்புகின்றனர் கிழக்காசியாவை சேர்ந்த கொரியர்கள்.வீட்டை, பெருக்கவோ, விளக்குகளை அணைக்கவோ கூடாது என் நம்பிக்கையுள்ளவர்கள், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து நாட்டுக்காரர்கள்.புத்தாண்டன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 12 திராட்சை பழங்களை சாப்பிட்டால், அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி தங்கும் என, நம்புகின்றனர், ஐரோப்பிய நாடான ஸ்பெயினை சேர்ந்தவர்கள்.- எஸ்.மாரிமுத்து