உள்ளூர் செய்திகள்

இளஞ்சிவப்பு ராணி!

ஐரோப்பா - ஆசியா கண்டம், ரஷ்யாவை ஆட்சி செய்த, ராணி எலிசபெத் பெட்ரோவ்னாவுக்கு, இளஞ்சிவப்பு நிறம் என்றால் உயிர். இந்த நிறத்தில் யாரும் உடையணிய கூடாது என, ஒரு சட்டம் போட்டிருந்தார். அதற்கு, 'இளஞ்சிவப்பு சட்டம்' என்று பெயர். அந்த சட்டத்தை மீறினால், கை, கால்களை வெட்டி, ரஷ்யாவின் வட பகுதியான, சைபீரிய காட்டில் வீசிவிடுவர். அங்கும் கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்த மகாராணி, ரஷ்ய சக்கரவர்த்தி மகாபீட்டரின் மகள். இவர், மரண தண்டனைக்கு எதிராக பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !