எதார்த்தம்!
காட்டில் நீண்ட நாட்களாக சீடனுடன் எதையோ தேடி கொண்டிருந்தார் குரு. என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது; குருவும் கூறவில்லை.அலைந்து திரிந்து, களைப்புடன் திரும்பும் குருவுக்கு, உணவு சமைத்து பரிமாறுவது போன்ற பணிவிடைகளை செய்து வந்தான் சீடன். அதுதான் அவன் வேலை.பல ஆண்டுகளாகியும் தேடுவதை நிறுத்தவில்லை குரு. இருவருக்கும் வயதாகி விட்டது.ஒரு நாள் -காட்டுக்குள் அலைந்து திரும்பினார் குரு. சீடனை காணவில்லை. மாறாக, ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.குருவைப் பார்த்ததும் சாஷ்டாங்கமாக பாதங்களில் விழுந்தான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'யாரப்பா நீ...''நான் தான் உங்கள் சீடன்...' குருவுக்கு கடும் குழப்பம்! யோசனையுடன், 'என்ன நடந்தது...' என கேட்டார். தயங்கியபடி, 'உங்கள் இரவு உணவுக்காக கூழ் காய்ச்சி கொண்டிருந்தேன்; காய்ச்சிய கூழை, கலக்கும் கரண்டி உடைந்து விட்டது... அதனால், ஒரு மரக்குச்சியை எடுத்து கலக்கினேன்... கூழ் மொத்தமும், கறுப்பு வண்ணம் கலந்து நாசமாகி விட்டது... பயத்தில் அந்தக் கூழை குடித்துவிட்டேன்; குடித்த அரை நாழிகையில், என் முதுமை மறைந்து, இப்படியாகி விட்டேன்...' என்றான்.பதறியபடி, 'எங்கே அந்த குச்சி... அதை தானே இத்தனை ஆண்டுகளாக தேடி கொண்டிருந்தேன்...' என்றார் குரு. 'அடுத்து கூழ் காய்ச்சியபோது, அதை அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்...' படபடப்பு இன்றி அமைதியாக சொன்னான் சீடன். மயங்கி சாய்ந்தார் குரு.குழந்தைகளே... நிதானமாக சிந்தித்தால் நன்மைகள் பெறலாம்.ஜோ.ஜெயக்குமார்