உள்ளூர் செய்திகள்

நதியே... நதியே...!

ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீளமான நதி நைல் நதி. விக்டோரியா ஏரியிலிருந்து மத்தியத் தரைக் கடலில் சங்கமமாகிறது.உலகின் மிகப் பழமையான சரித்திரப் பாரம்பரியம் நைல் நதிக்கு உண்டு. புராதன எகிப்தியர் களின் மகோன்னதமான பொற்காலத்தை உருவாக்கியது. நைல் நதியின் வெள்ளம், தான் பாயும் பகுதிகளைச் செழிப் புள்ளதாக்கியதினால்தான். நைல் நதியின் உற்பத்தி ஸ்தானம், 'விக்டோரியா ஏரி' என்று கூறப்பட்டாலும், உண்மையான அதன் பிறப் பிடத்தைக் காணும் முயற்சிகள் பல தேசத்தவர் களாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நைல் நதியின் வற்றாத நீருக்கு, 'விக்டோரியா' 'ஆல்பர்ட்' 'எட்வர்ட்' ஆகிய ஏரிகள் காரணமாக இருந்தாலும், விக்டோரியா ஏரியை நிரப்புவது 'காக்ரா' என்னும் நதி. காக்ரா நதியைப் போல, 'காங்கோ' நதியும் நிரப்புகிறது. ஆகவே, இந்த ஓடைகளான காக்ரா நதிதான் - நைல் நதியின் பிறப்பிடம் என்று கருதவேண்டி இருக்கிறது.நைல் நதியை எகிப்தியர்கள் 'ஹாப்பி' என்று அழைக்கின்றனர். பைபிளில் இந்நதி 'யோர்' என்று கூறப்படுகிறது. எகிப்திய மொழியில் இதற்கு நதி என்று பொருள். 'நைல்' என்று பெயர் சூட்டியவர்கள் கிரேக்கர் களும், ரோமானியர்களும். அவர்கள் அழைத்தது 'நிலஸ்' என்று. ஆனால், அந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. இன்றைய நவீன எகிப்தியர் கள் இதைச் சில போது, 'எல்பார்' என்றும் கூறுகின்றனர்.விக்டோரியா ஏரியிலிருந்து நைல் நதி நீர்வீழ்ச்சியாகத் தனது பயணத்தை தொடங்குகிறது. பெரும் நீர் வீழ்ச்சி யாக ஆல்பர்ட்டில் விழுகிறது. விக்டோரியா ஏரி, கடல் மட்டத்துக்கு மேல் 3,704 அடிகள் உயரத்தில் இருக் கிறது. விக்டோரியா ஏரியிலிருந்து 1,400 அடிகள் கீழே ஆல்பர்ட் ஏரியில் விழுகிறது. இங்கு இதை 'மலை நதி' என்று அழைக்கின்றனர். கீழே இறங்கும்போது இதனுடன் சோபாத் என்னும் ஆறு சேர்ந்து கொள்ளுகிறது. இந்த இணைப்பில், இதை, 'வெள்ளை நைல்' என்று அழைக்கின்றனர். சோபாத் நதியின் நீர் பால் வெள்ளை நிறமானது. இங்கிருந்து கோர்ட்டோம் வரை நைல் நதியின் நிறம் சாம்பல் நிறமானது.கோர்ட்டோமில், நீல நைல் வெள்ளை நைலோடு இணைகிறது. பால் வெள்ளை, சாம்பல் நிறத்தையும், நீலநிறத்தையும் தனித் தனியே இங்கு பளிச் சென்று இனங்காண முடியும். பெரிய நதியான நீல நைல் டானா ஏரியிலிருந்து உற்பத்தியாகி, எத்தியோப்பியா வில் ஓடும் போது பல நதிகள் இதனுடன் இணைகின்றன. கோர்டோமுக்குக் கீழே 200வது மைலில் நைல் நதியோடு சங்கமமாகும் கடைசி நதி 'அட்பாரா' என்னும் கருப்பு நதி. நைல் சூடான் நாட்டில் பாய்ந்து ஓடும் போது மிகப் பெரிய 'எஸ்' வடிவை உருவாக்குகிறது. இப் போக்கில் சிறு சிறு தீவுகளை யும், ஆறு நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்குகிறது. இந்த நீர் வீழ்ச்சிகளிலிருந்து சூடான் நாடு ஏராளமான மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளுகிறது.'காடராக்ட்' எனப்படும் இந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றில் தான் உலகின் மிகப் பெரிய அணையான 'அஸ்வான்' அணை கட்டப்பட்டுள்ளது. மத்திய தரைக் கடலிலிருந்து 500 மைல்கள் (உள்நாட்டில்) அமைந்துள்ள இந்த அணை, மகத்தான மனித சாதனையில் ஒன்று. கெய்ரோவிற்கு பிறகு கடலிலிருந்து 99வது மைலில் மாபெரும் நதியான நைல் கடலில் கலக்கப் பல கிளைகளாகப் பிரிந்து உலகின் பெரிய டெல்டாவை உருவாக்குகிறது. 10ஆயிரம் சதுரமைல் பரப்புக்கு நைல் டெல்டா விரிந்து பரந்துள்ளது. சூயஸ் கால்வாய் நைல் நதி டெல்டாவில்தான் இருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. எகிப்தின் செழிப்புமிக்க பள்ளத்தாக்கை 'எகிப்துக்கு நைல் நதியின் வெகுமதி' என்று கூறுவதுண்டு. ஆண்டு தோறும் நைல் நதியின் வெள்ளம் கொண்டு வந்து ஒதுக்கும் வளமான வண்டல் இல்லை யானால், எகிப்திற்கு அந்தச் செழிப்பு மிக்க பூமி கிடைத்திருக்காது. எகிப்து நாட்டின் ஜனத் தொகையில் 95 சதவீத மக்கள் நைல் நதிக் கரையோரத்தில்தான் வாழ்கின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !